விஜய் - 68 படப்பிடிப்பு எப்போது?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்திற்குப் பின், விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு ‘சிஎஸ்கே’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், இப்படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுப்பதற்காக விஜய் லண்டன் சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கிக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்நிலையில், விஜய் - 68 படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.