வேலையில்லா பட்டதாரி தெலுங்கு மறுவெளியீடு: கொண்டாடிய ரசிகர்கள்!
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இன்று ஆந்திரத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. சமுத்திரகனி, அமலா பால், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இப்படம், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ‘ரகுவரன் பி.டெக்’ என்கிற பெயரில் வெளியானது. அங்கும் வசூலைக் குவித்தது.
இதையும் படிக்க: கார்த்திக்கு வில்லனாக சத்யராஜ்!
Advertisement
Advertisement
இந்நிலையில், ஆந்திரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்படம் தெலுங்கில் இன்று மறுவெளியீடு செய்யப்பட்டது. காலைக் காட்சியுடன் ஆரம்பமான இப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.