ரூமியின் வரிகளுடன் வெளியான யஷ் படத்தின் அறிவிப்பு!
நடிகர் யஷ், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் பெயர் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
மலையாளத்தில், ‘லையர்ஸ் டைஸ்’ ,’மூத்தோன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ். நடிகையான இவர் இயக்குநராக அறிமுகமாகி பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் கணவர் ராஜீவ் ரவியும் சிறந்த இயக்குநராக அறியப்படுகிறார்.
நடிகர் யஷ் இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தன் 19-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
Advertisement
Advertisement
ரூமியின் புகழ்பெற்ற வரியான, ‘எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடுகிறது’ என்கிற வாசகத்தை படத்துக்கு பயன்படுத்தியுள்ளனர்.
கேஜிஎஃப் - 2 படத்திற்குப் பின் புதிதாக எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த யஷ், இப்படத்தில் இணைகிறார் என்கிற தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.