ஓடிடியில் கூச முனுசாமி வீரப்பன்!
வீரப்பன் குறித்த ஆவணப்படமான ‘கூச முனுசாமி வீரப்பன்’ ஓடிடியில் வெளியாகியுள்ளது
சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணப்படம் உருவாகியுள்ளது. வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மற்றும் அவரது குழுவின் மேற்பார்வையில் இத்தொடர் உருவாகியுள்ளது.
ஆர்.வி.பிரபாவதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம் டிச.8 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. மிக்ஜம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டதால், இதன் வெளியீட்டை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிக்க: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கூச முனுசாமி வீரப்பன்? திரை விமர்சனம்
Advertisement
Advertisement
இந்நிலையில், ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த ஆவணப்படம் இன்று வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், வீரப்பனை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தொடர்பாக ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன் (The Hunt For Veerappan)’ ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.