பாலிவுட் படத்தில் த்ரிஷா!
நடிகை த்ரிஷா நீண்ட இடைவேளைக்குப் பின் பாலிவுட் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.
மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.
அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், லியோ திரைப்படங்களின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி!
தற்போது, அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சல்மான் கானை வைத்து இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கும் படத்திற்கு நாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ’கட்டா மேத்தா’ என்கிற பாலிவுட் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.