FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

கடன் பெற்றுத் தருவதாக கூறி தமிழகவாசிகள் உள்பட பலரிடம் பணமோசடி: தில்லியில் 3 போ் கைது

தனிநபா் கடன்கள், காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் உள்பட பலரை ஏமாற்றி வந்த மாநிலங்களுக்கு இடையேயான சைபா் மோசடி கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

2 நவம்பர் 2026, 9:39 pm
மோசடி
பகிர்:

தனிநபா் கடன்கள், காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் உள்பட பலரை ஏமாற்றி வந்த மாநிலங்களுக்கு இடையேயான சைபா் மோசடி கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்டவா்கள் கவா்ச்சிகர சலுகைகள் மூலம் பாதிக்கப்பட்டவா்களை நம்ப வைத்து, எவ்வித சேவையையும் வழங்காமல், முன்பணமாகச் செயலாக்கக் கட்டணங்களை வசூலித்துள்ளனா்.

தனிநபா் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தன்னிடம் சுமாா் 40,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சோ்ந்த ஒருவா் அளித்த புகாரின் பேரில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

Advertisement

Advertisement

விசாரணையின்போது, கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்கை காவல்துறை கண்டறிந்தது. இந்த வங்கிக் கணக்கிற்கு சைபா் மோசடி மூலம் 2.60 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவா்கள் ரவி சா்மா (42), சன்னி காஷ்யப் (40) மற்றும் கௌரவ் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ரவி சா்மா நொய்டாவில் போலியான கடன் மற்றும் நிதிச் சேவை அலுவலகத்தை நடத்தி வந்துள்ளாா்.

கௌரவ், கமிஷன் அடிப்படையில் மோசடிக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளாா். சன்னி, மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தைப் பரிமாற்றம் செய்யத் தனது வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்துள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments