’ஜான்வி கபூர் தமிழில் ஒப்பந்தமாகவில்லை..’: போனி கபூர்
பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தமிழில் எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என அவரின் தந்தை போனி கபூர் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தமிழில் எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என அவரின் தந்தை போனி கபூர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் இளைய மகளான ஜான்வி கபூர் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தமிழில் வெற்றிபெற்ற கோலமாவு கோகிலா பட ஹிந்தி ரீமேக்கான 'குட் லக் ஜெர்ரி'யில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடித்திருந்தார். இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சில ஹிந்தி படங்கள் சுமாரான வெற்றியைத் தந்தன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ’துணிவு’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இந்நிலையில், தமிழில் ஜான்வி கபூர் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் பரவி வந்தது. தற்போது, இத்தகவலை மறுக்கும் விதமாக ஜான்வி கபூர் இதுவரை எந்தத் தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகை ஜான்வி கபூர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.