FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வாத்தி இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு கதாநாயகியிடம் ரசிகர்கள் கோரிக்கை!

வாத்தி இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடிகை சம்யுக்தாவிடம் ரசிகர்கள் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். 

Updated On : 4 பிப்ரவரி 2023, 12:23 pm IST
பகிர்:

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இன்று இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதற்காக நடிகை சம்யுக்தா தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லோரும் தயாரா என ஒரு பதிவும் இன்னொரு பதிவில் விமானப் பயணத்திற்கு நேரமாகிவிட்டது எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவிற்கு கீழ் இசை வெளியீட்டு விழாவில் பாடலை பாடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ‘வாத்தி’ பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. 

நடிகை சம்யுக்தாவும் தமிழ் பாடல்களை பல்வேறு நேர்காணல்களில் அருமையாக பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments