பூஜா ஹெக்டேவின் அசத்தல் ’அரபிக்குத்து’ நடனம்.. வைரல் விடியோ!
அரபிக்குத்து பாடல் வெளியாகி ஓர் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி நடிகை பூஜா ஹெக்டே தன் நடன விடியோவை வெளியிட்டுள்ளார்.
அரபிக்குத்து பாடல் வெளியாகி ஓர் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி நடிகை பூஜா ஹெக்டே தன் நடன விடியோவை வெளியிட்டுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் இயக்குநர் நெல்சன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
பீஸ்ட் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. குறிப்பாக அரபிக் குத்து வெளியாகி இந்திய அளவில் பிரபலமானது. இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்தனர். சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களும் வைரலாகின.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ’டாடா உணர்வுப்பூர்வமான படம்..’: பிரபல நடிகர் கருத்து
அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடினர். புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி இந்தப் பாடலுக்கும் நடனம் அமைத்திருந்தார். இந்த ‘அரபிக் குத்து’ விடியோ பாடல் யூடியூப்பில் 390 மில்லியன்(39 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.
அரபிக் குத்து விடியோ பாடல் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் இப்பாடலின் வரிகளுக்கு நடனமாடும் படப்பிடிப்பு விடியோவை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.