முகப்பு
செய்திகள்

சச்சினை சந்தித்த சூர்யா...

நடிகர் சூர்யா இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்துள்ளார்.

Updated On : 22 பிப்ரவரி 2023, 3:03 pm IST
பகிர்:

நடிகர் சூர்யா இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்துள்ளார்.

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

நிகழ்காலம் கலந்து வரலாற்று பின்னணியில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமென்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

இந்நிலையில், நடிகர் சூர்யா சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்துள்ளார். சந்திப்பு குறித்து சச்சின் தன் டிவிட்டர் பக்கத்தில் தமிழில்,      'இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது.உங்களைச் சந்தித்தது அற்புதமாக இருந்தது சூர்யா.மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments