சிறந்த தென்னிந்தியப் பிரபலமாக சூர்யா தேர்வு
தமிழ்த் திரையுலகில் சூர்யா முதலிடத்திலும் விஜய் 2-வது இடத்திலும் உள்ளார்கள்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹியூமன் பிராண்ட்ஸ் (Indian Institute of Human Brands (IIHB)) என்கிற அமைப்பு தென்னிந்தியாவில் நடத்திய திரைப்படப் பிரபலங்கள் தொடர்பான ஆய்வில் சூர்யா முதலிடம் பிடித்துள்ளார்.
நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் நவம்பர் 2022 - டிசம்பர் 2022 வரையில் 5,000-க்கும் மேற்பட்டவர்களிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. நம்பிக்கை, அடையாளம் தெரிதல், கவரும் தன்மை, மரியாதை போன்றவற்றின் காரணிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. விஜய், பிரபாஸ், ராம் சரண் போன்ற பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த தென்னிந்தியப் பிரபலமாக சூர்யா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் சூர்யா முதலிடத்திலும் விஜய் 2-வது இடத்திலும் உள்ளார்கள். தெலுங்குத் திரையுலகில் அல்லு அர்ஜுனும் மலையாளத் திரையுலகில் துல்கர் சல்மானும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.