கவுண்டமணி நாயகனாகும் ‘பழனிச்சாமி வாத்தியார்’ படத்தின் அப்டேட்!
நடிகர் கவுண்டமணி மீண்டும் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
நடிகர் கவுண்டமணி மீண்டும் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் நடிகர் கவுண்டமணி. இன்றளவும் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் ரசிக்க வைப்பவை.
இதையும் படிக்க: ’லவ் டுடே’ இதுவரை வசூல் எவ்வளவு?
Advertisement
Advertisement
உடல்நிலை காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்தவர் கடந்த 2015 ஆம் ஆண்டு 49-ஓ திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து ’எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் தற்போது மீண்டும் ‘பழனிச்சாமி வாத்தியார்’ என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இதில் கஞ்சா கருப்பு, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மதுரை செல்வம் தயாரிக்கும் இப்படத்தை அன்பரசன் இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.