FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

‘போற உயிர் போராடியே போகட்டும்’: பொம்மை நாயகி திரைப்பட டிரைலர் வெளியீடு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

6 பிப்ரவரி 2024, 6:23 pm IST
பகிர்:

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகிவரும் பொம்மை நாயகி  திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு நடித்துள்ளார்.  இந்தப் படத்தை ஷான் இயக்குகிறார்.

பரியேறும் பெருமாள், கபாலி, ஜெய் பீம் படங்களில் நடித்து கவனம் பெற்ற  நடிகை சுபத்ரா, யோகி பாபுவின் மனைவியாக நடித்துள்ளார். அறிவு, கபிலன், இளைய கம்பன் மற்றும் சிலர் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்கள்.  சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். 

Advertisement

Advertisement

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலரை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments