நாங்கள் எட்டப்பர்கள் அல்லர், கட்டபொம்மன்கள்: மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டின் உரிமைகளில் திமுக சமரசம் செய்துகொள்ளாது என மு.க. ஸ்டாலின் கூறியது குறித்து...

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டு திமுக முடிவெடுத்திருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் பங்களிப்பை எடுத்துரைத்த ராகுல் காந்திக்கு நன்றி.
மாநில மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில்கொண்டு மட்டுமே திமுக எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளது. மாநில உரிமைகளைக் காப்பதில் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.
Advertisement
Advertisement
நாங்கள் எட்டப்பர்கள் அல்லர், கட்டபொம்மன்கள் என வரலாறு தீர்ப்பளிக்கும்" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து திமுக எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவதற்காக, மு.க. ஸ்டாலினை இன்று (நவ. 29) சந்திக்கவிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சிக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
மேலும், நாட்டின் நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், இந்த மசோதாவை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டு ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான், ராகுல் காந்தியின் பதிவுக்கு மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.