முகப்பு
செய்திகள்

டென்மார்க்கில் சூர்யா - ஜோதிகா: வைரல் விடியோ!

சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுவந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Updated On : 3 ஜூலை 2023, 5:22 pm IST
பகிர்:

சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுவந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா உடல் எடையைக் கூட்டுவதற்காக உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இப்படம் முடிந்தததும் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

நடிகை ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன்  ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்திருந்தார். அக்கா - தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  ஜோதிகா உடற்பயிற்சி மையத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட விடியோ வைரலானது.

இந்த நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா  தங்கள் இரு குழந்தைகளுடன் டென்மார்க்-க்கு சுற்றுலா சென்ற விடியோவை, ஜோதிகா தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.