வெளியானது கமல்ஹாசன் - 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 233-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் பெரு வெற்றி பெற்றதால் அவரது இந்தியன் 2 மீண்டும் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியன் - 2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கமல் - வினோத் கூட்டணியில் உருவாகும் கமல் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நெஷனல் வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நாடி நரம்பெல்லாம்... நெஞ்சமே பாடலைப் பாராட்டிய செல்வராகவன்
‘ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதைக் உறுதிசெய்கின்றன.
இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.