சுப்ரமணியபுரம்: 15 ஆண்டுகள்!
சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது.
சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது.
சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நடிகர் ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இப்படம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி வெளியானது.
சசிகுமார், ஜேம்ஸ் வசந்தன், சுவாதி ஆகியோருக்கு இது முதல் படமாகும். சமுத்திரகனி மற்றும் ஜெய்யின் திரை பயணத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | லியோவில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்?
கண்கள் இரண்டால், மதுர குழுங்க, ஆடுங்கடா உள்ளிட்ட பாடல்களை இன்றுவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்கள் ஒலிக்காத நிகழ்வுகளே இல்லை என்ற வரலாறும் உண்டு.
இந்தப் படம் வெளியாகி 15ஆண்டுகளான நிலையில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் காணொலி வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.