இங்க நான்தான் கிங்: ரஜினியின் குரலில் ஜெயிலர் பட 2வது சிங்கிள் ப்ரோமா விடியோ
ரஜினியின் குரலில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமா விடியோ வெளியாகியுள்ளது.
ரஜினியின் குரலில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமா விடியோ வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார் வில்லனாகவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதற்கு முன்பாக இசை வெளியீட்டு விழாவை ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே படத்திலிருந்து காவாலா பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் 2ஆவது பாடலான ஹூக்கும் எனத் தொடங்கும் பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி இன்று ரஜினியின் மிரட்டலான குரலில் படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமா விடியோ வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.