FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹைதராபாத்தில் ராக்கா படப்பிடிப்பு!

ராக்கா திரைப்பட படப்பிடிப்பு குறித்து...

44 வினாடிகள் முன்பு
அட்லி, அல்லு அர்ஜுன்
பகிர்:

இயக்குநர் அட்லியின் ராக்கா திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல்.

இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப் பெயரிட்டுள்ளனர். ஆச்சரியப்படும் வகையில் பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் இதன் முக்கிய காட்சிகள் உருவாகி வருவதால் அவதார் போன்று மிகச்சிறப்பான காட்சியனுபவங்களக ராக்கா எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இதனால், ராக்கா வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தனா, உள்ளிட்டோர் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இதில், வில்லியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், ராக்காவில் தான் நடிக்கவில்லை என்றும் அதற்காக யாரும் தன்னை அணுகவில்லை என்றும் ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், மும்பையில் நடைபெற்று வந்த ராக்கா படப்பிடிப்பு அடுத்ததாக ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இதனை துபையில் நடத்தத் திட்டமிட்ட அட்லி, சில பாதுகாப்பு காரணங்கள் கருதி ஹைதராபாத்திலேயே ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

The shooting for director Atlee's film 'Raaka' is set to take place in Hyderabad.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments