விஷ்ணு விஷால் பிறந்தநாள்: 3 படங்களின் போஸ்டர்கள் வெளியீடு!
நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள 3 படங்களிலிருந்து புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவரது பிறந்தநாளினை முன்னிட்டு 3 படங்களிலிருந்து புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான, ‘எஃப்ஐஆர்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்திலும் முரளி கார்த்திக் இயக்கத்தில் ‘மோகன் தாஸ்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: எதிர்நீச்சல் போல... வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் 2 தொடர்கள்!
Advertisement
Advertisement
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: விஷால் 34: கதாநாயகியை அறிவித்த படக்குழு!
லால் சலாம் படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினியின் படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில் விஷ்ணு விஷால் பிறந்தநாள் பரிசாக அவர் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர். இதில் திருநாவுக்கரசு என்ற பெயரில் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார்.
மோகன் தாஸ் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. முரளி கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.