விடுதலை - 2 படப்பிடிப்பு துவக்கம்
விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.