முகப்பு
செய்திகள்

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவை இலவசமாக பார்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்! 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  1000 அனுமதிச் சீட்டுகளை இலவசமாக தரப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Updated On : 23 ஜூலை 2023, 4:08 pm IST
பகிர்:

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஏற்கெனவே, இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை பெற்று வருகிறது. 

Advertisement

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெற உள்ளதென படக்குழு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் 500 பேருக்கு தலா 2 அனுமதிச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது. நாளை மதியம் 1 மணிக்கு http://jailer.sunpictures.in/ என்ற இணையதளத்தில் முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.