இவரைத் தடுக்க யாருமில்லை: ஷாருக்கான் வெளியிட்ட விஜய் சேதுபதியின் போஸ்டர்!
ஜவான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளது. தமிழின் நட்சத்திர நடிகை நயன்தாரா, நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “இவரை தடுக்க யாருமில்லை... அல்லது இருக்கிறார்களா? பாருங்கள்” என ட்வீட் செய்து ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.