முகப்பு
செய்திகள்

தனுஷ் - 51 படத்தில் இணையும் பிரபலங்கள்!

தனுஷ் - சேகர் கமூலா கூட்டணியில் உருவாகும் படத்தில் நட்சத்திர நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜூலை 2023, 3:51 pm IST
பகிர்:

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

ராயர் என்கிற தலைப்பில்(தகவல்) உருவாகவுள்ள இப்படத்தில் தனுஷ் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தன் 51-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நாகர்ஜுனா, நடிகைகள் சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இசையமைப்பாளாராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.