திருப்பரங்குன்றம் மலையிலிருந்து காவல்துறை வெளியேறக் கோரி ஆர்ப்பாட்டம்!
திருப்பரங்குன்றம் மலையிலிருந்து காவல்துறை வெளியேறக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர்

திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் வெளியேற வேண்டும் என்று கூறி பக்தர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றும் நடைமுறைக்குத் தேவையான பாதுகாப்பு பணிகளை மத்திய சிஆர்பிஎஃப் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள்ள நேற்று இரவே சிஆர்பிஎஃப் வீரர்கள் திருப்பரங்குன்றம் வருகை தந்திருந்தனர்.
Advertisement
Advertisement
இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் மலை மீது ஏறினர். இந்நிலையில் பகல் 11 மணிக்கு மேல் மலைக்கு மேல் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் மலையடிவாரத்திலேயே காத்திருந்தனர்.
இந்நிலையில் மலை மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் அனைவரையும் வெளியேறக் கோரி அவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.