முகப்பு
செய்திகள்

இயக்குநர் சுசீந்திரன் படப்பிடிப்பில் விபத்து

இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பில் மின்னல் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 24 ஆகஸ்ட் 2023, 10:56 am IST
பகிர்:

இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பில் மின்னல் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

சுசீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ‘மார்கழி திங்கள்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியுள்ளது. 

Advertisement

Advertisement

அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து ஏற்படமால் படக்குழுவினர் தப்பியுள்ளனர். இதுகுறித்து சுசீந்திரன், ‘மார்கழி திங்கள் படப்பிடிப்பில் இடி மின்னலுடன் பயங்கர மழை பெய்தது. படப்பிடிப்புகாக கட்டப்பட்டிருந்த லைட்டுகள் கீழே விழுந்து நொறுங்கின. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக 5 லைட்மேன்கள் உயிர் தப்பினர்' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.