ஆதிபுருஷ் படத்தினை விட காஜலின் கிராபிக்ஸ் சிறப்பு: ரசிகர் கிண்டல்!
ஆதிபுருஷ் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். சீதாவாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி வெளியானது.
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. படமும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. 3வது நாளில் ரூ.340 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் காபியை எப்படி குடிப்பேனென கிராபிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். இதில் காபி கோப்பையில் காஜல் இருக்குமாறு கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பதிவிற்கு ரசிகர் ஒருவர், “ஆதிபுருஷ் படத்தினை விட உங்களது கிராபிக்ஸ் நன்றாக உள்ளது” என கமெண்ட் செய்துள்ளார்.