பாயும் ஒளி நீ எனக்கு: புதிய அப்டேட்!
விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
டாணாக்காரன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு விக்ரம் பிரபு வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோருடன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தினை இயக்குகிறார் கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக் அத்வைத்.
இப்படம் ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என டீசரிலிருந்து தெரியவருகிறது. இந்தப்படத்திற்கு இசை- சாகர், பாடலாசிரியர்- கார்த்திக் நேத்தா, ஸ்டன்ட் மாஸ்டர்- தினேஷ் காசி.
Advertisement
Advertisement
தற்போது, இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.