கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்கள்: படத்தின் மறுவெளியீட்டுக்கு இவ்வளவு வரவேற்பா?
கேரளத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகியுள்ள மலையாள படத்தைக் காண கேரளத்தில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1993-ம் ஆண்டு இயக்குநர் பாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மணிச்சித்திரதாழ். இந்தப் படம் கேரளீயம் 2023 நிகழ்வின் ஒரு பகுதியாக மீண்டும் திரையிடப்பட்டுள்ளது.
கேரளாவின் பண்பாட்டைக் கொண்டாடும் வகையில் கேரள அரசு ஒருங்கிணைக்கும் நிகழ்வு கேரளீயம் 2023. இந்நிகழ்வுக்காக மலையாள கிளாசிக் திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
மணிச்சித்திரதாழ் படத்தைக் காண ரசிகர்கள் கொட்டும் மழை என்றும் பாராமல் திரையரங்குகளில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை (அக்.3) மாலை 7:30 மணி திரையிடலுக்கு இருக்கைகள் எண்ணிக்கையை விட மக்கள் அதிகமாக குவிந்ததால் 9.15 மணிக்கு மற்றுமொரு திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டது. ரசிகர்கள் சிலர் திரையரங்குகளின் படிக்கட்டுகளில் அமர்ந்தும் படத்தை பார்த்து ரசித்தனர்.
இதையும் படிக்க: வெளியானது ஹாய் நான்னா படத்தின் 3வது பாடல்!
இந்தத் திரைப்படம் புகழ்பெற்ற படம் மற்றும் சிறந்த நடிகை ஆகிய இரு பிரிவுகளில் தேசிய விருது பெற்றது. இதனை தழுவி தமிழில் உருவாகிய படமே சந்திரமுகி என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.