அர்ஜுன் ரெட்டி இயக்குநர் படத்தில் பிரபாஸ்!
பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் தெரிவித்தார்.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமல் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது.
நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தாண்டின் சிறந்த திரைப்படம் இதுதான்: சமந்தாவின் பாராட்டு மழையில் ஜோதிகா!
Advertisement
Advertisement
படத்தில் வன்முறை காட்சிகள் ரத்தம் தெறிக்கக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பா மகனுக்கிடையில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: நடிகை வனிதாவை தாக்கிய பிரதீப் ஆண்டனி ஆதரவாளர்!
சமீபத்திய அனிமல் பட புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது அடுத்தப் படம் நடிகர் பிரபாஸுடன் எனக் கூறியுள்ளார். இந்தப் படத்தில் பிரபாஸ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஸ்பிரிட் எனப் பெயரிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு செப். படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது நடிகர் பிரபாஸின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.