வெளியானது சிவகார்த்திகேயனின் அயலான் பட டீசர்
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயலான் பட டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயலான் பட டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அயலான். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும் படத்தில் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரியிலேயே முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
ஏற்கனவே படத்திலிருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் வெளியானது. படம் வரும் 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அயலான் பட டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.