தென்னாப்பிரிக்காவில் விஜய் - 68 படப்பிடிப்பு!
விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பாடல் காட்சி ஒன்றை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தென்னாபிரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, பிரியங்கா மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.