முகப்பு
செய்திகள்

புதிய தொடர்கள்... சந்தியாராகம், நளதயமந்தி, சிங்கப்பெண்ணே பெற்ற டிஆர்பி!

நளதயமந்தி, சந்தியா ராகம் ஆகிய தொடர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:11 AM
பகிர்:

சின்னத்திரையில் புதிதாக ஒளிபரப்பான தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அவை பெற்றுள்ள டிஆர்பி புள்ளிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சின்னத்திரையில் சிங்கப்பெண்ணே, சந்தியாராகம், நளதயமந்தி போன்ற தொடர்கள் புதிதாக ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் சிங்கப்பெண்ணே தொடர் அக்டோபர் 9ஆம் தேதிமுதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கிராமத்துப் பின்னணியில் வளர்ந்த பெண்ணைச் சுற்றி நடக்கும் இந்தக் கதையில், மணீஷா மகேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடர் முதல் வாரத்திலேயே 10.28 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

நளதயமந்தி, சந்தியா ராகம் ஆகிய தொடர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

நளதயமந்தி தொடர் அக்டோபர் 9ஆம் தேதிமுதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நளதமயந்தி தொடரில் பிரியங்கா நல்காரி, நந்தா ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் தொடர் 3.09 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.

சந்தியா ராகம் தொடர் அக்டோபர் 9 முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரில் ஸ்வர்ணா, விஜே தாரா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். அக்கா - தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது. இந்தத் தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்தில் 3.36 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.