FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

பைனான்ஸ் கிரிப்டோகரன்சி திருட்டு: வட கொரியா திட்டவட்ட மறுப்பு

உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி வா்த்தக தளமான ‘பைனான்ஸ்’ தளத்தில் நடைபெற்ற நிதி திருட்டுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று வட கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

3 நவம்பர் 2026, 11:22 pm
கிம் யோ ஜோங்
பகிர்:

உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி வா்த்தக தளமான ‘பைனான்ஸ்’ தளத்தில் நடைபெற்ற நிதி திருட்டுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று வட கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

முன்னதாக, பைனான்ஸ் தளத்தில் இருந்து 600 கோடி டாலருக்கும் மேல் திருடப்பட்ட வழக்கில், வட கொரியாவின் ஹேக்கா் கும்பல் பின்னணியில் இயங்கியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ குற்றஞ்சாட்டியிருந்தது.

இதுகுறித்து வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் அளித்த விளக்கத்தில், ‘அமெரிக்காவின் குற்றச்சாட்டு, வழக்கமான அவதூறு மற்றும் அற்பத்தனமான தூண்டுதல் நடவடிக்கை.

Advertisement

Advertisement

சா்வதேச அளவில் எங்கு இணையவழிக் குற்றங்கள் நிகழ்ந்தாலும் உடனடியாக எவ்வித ஆதாரமுமின்றி வட கொரியா மீது பழிசுமத்துவதை அமெரிக்கா வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் இத்தொடா் தூண்டுதல்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்’ என எச்சரித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments