காதலரை அறிமுகப்படுத்திய அமலா பால்!
நடிகை அமலா பால் தன் காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.
இறுதியாக, அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’, 'கிறிஸ்டோபர்’ படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அமலா பாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நீண்டகால நண்பரான ஜகத் தேசாய், கொண்டாடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, நடனமாடிக்கொண்டிருந்த தேசாய் திடீரென தான் வைத்திருந்த மோதிரத்தைக் காண்பித்து அமலா பாலிடம் தன் காதலை தெரிவித்திருக்கிறார்.
ஆச்சரியமடைந்த அமலாவும் அவரை ஏற்றுக்கொள்வதாகக் கூறி தன் காதலை அறிவித்திருக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையர்களின் இந்த காதல் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.