FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓடிடியில் சந்திரமுகி - 2

சந்திரமுகி - 2 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

2 பிப்ரவரி 2024, 8:43 am IST
பகிர்:

சந்திரமுகி - 2 திரைப்படம் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் செப்.28ஆம் தேதி வெளியானது.

கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

Advertisement

Advertisement

லைகா தயாரித்த இந்த படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 
மேலும் படத்தின் வசூலும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இந்த நிலையில் 'சந்திரமுகி 2' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments