தாமதமாக வெளியான விக்ரம் 62 பட அறிவிப்பு விடியோ!
மாலை 6 மணிக்கு வெளியாவதாக இருந்த விக்ரம் 62வது படத்தின் அப்டேட் தாமதமாக வெளியானது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். நல்ல வரவேற்பினைப் பெற்ற பொன்னியின் செல்வனுக்கு பிறகு பா.இரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விக்ரம். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: நடிகை அதிதி பிறந்தநாளுக்கு சித்தார்த்தின் கவிதை!
விக்ரமின் 62வது படத்தை ஜூட் ஆண்டனி இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா, நிவின் பாலி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஒரு பக்கம் கூற மற்றொரு பக்கம் சித்தா இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்க உள்ளதாகவும் பலவிதமாக தகவல்கள் வெளியாகியன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கதீஜா ரஹ்மானின் முதல் பாடலை வெளியிட்ட அனிருத்!
6 மணிக்கு வெளியாக இருந்த அப்டேட் தொழில்நுட்பம் காரணமாக ஒருமணி நேரம் தாமதமாக வெளியானது. இதில் சித்தா இயக்குநர் எஸ்யூ அருண்குமார் இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘சித்தா’ சமீபத்தில் வெளியானது.
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் சு.அருண்குமார் இயக்க ரியா ஷிபு தயாரிக்கிறார். 3.43 நிமிடம் உள்ள இந்த சியான் 62 அறிவிப்பு விடியோ கவனம் ஈர்க்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.