முகப்பு
செய்திகள்

2 கோடிப் பார்வைகள்... ரசிகர்களைக் கவரும் மார்க் ஆண்டனி டிரைலர்!

விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

Updated On : 5 செப்டம்பர் 2023, 2:13 pm IST
பகிர்:

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் டிரைலர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருவதுடன் யூடியூப்பில் வேகமாக 22 மில்லியன்(2.2 கோடி) பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments