வாடிவாசல் பணிகளில் கவனம் செலுத்தும் வெற்றிமாறன்!
சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திற்கான முதல்கட்ட பணிகளை இயக்குநர் வெற்றிமாறன் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காகக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார்.
சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர்.
கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கமல்ஹாசனுக்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா!
கங்குவாக்குப் பின் சுதா கொங்காரா படத்தில் சூர்யா நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வாடிவாசல் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக வெற்றிமாறன் அடிக்கடி லண்டன் சென்று வருவதாகவும் விடுதலை - 2 படப்பிடிப்பை முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்குவார் என்றும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.