விபத்தில் சிக்கிய சின்னத்திரை நடிகர்: அவருக்கு பதில்?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடரில் ராம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடன இயக்குநர் நந்தாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடரில் ராம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடன இயக்குநர் நந்தாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நடன இயக்குநர் நந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சீரியல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால், தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால், கண்ணே கலைமானே தொடரிலிருந்து விலகுவதாக விடியோ வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இனி இவரது கதாபாத்திரத்தில், தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்துவரும் நவீன் வெற்றி தொடர்ந்து நடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கார் வாங்கி பரிசளித்த குக்வித் கோமாளி மோனிஷா!
கண்ணே கலைமானே தொடர் டிஆர்பியில் பின்தங்கி இருப்பதாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி வரவுள்ளதாலும் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.