முகப்பு
செய்திகள்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் நெரிசலில் சிக்கியதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

Updated On : 11 செப்டம்பர் 2023, 10:36 am IST
பகிர்:

சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் நெரிசலில் சிக்கியதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் பகுதியில் நடக்கவிருந்தது. ஆனால், மழை காரணமாக அந்த இசைக்கச்சேரி தள்ளி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் செப்.10 (நேற்று) ஞாயிறு மாலை நிகழ்ச்சி நடைபெறும் என மறுதேதி குறித்த அறிவிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

அதேபோல், நேற்று சென்னை கிழக்கு சாலையில் உள்ள பனையூருக்கு அருகே நடைபெற்றது. இதற்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.

ஆனால், அங்கு ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். காரணம், சரியான பார்க்கிங் வசதி இல்லாததால் பல மணி நேர காத்திருக்குப் பின்பே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றுள்ளனர். ஆனால், ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. மேலும், கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறி உள்ளனர்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனம் எழுப்பிய நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பிய நிகழ்வுக்கு முழு பொறுப்பையும் தாங்களே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ நிறுவனத்தின் ட்வீட்டை ஏ.ஆர்.ரஹ்மானும் ரீட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.