ஜவானின் சக்தி: 9வது நாள் வசூல் விவரத்தை அறிவித்த படக்குழு!
ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் 9வது நாளில் வசூலிக்கப்பட்டுள்ள விவரத்தினை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான்.
இதையும் படிக்க: ரசிகைக்கு நன்றி தெரிவித்த விஷால் பட நடிகை!
Advertisement
Advertisement
இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் நாளில் அதிகமாக வசூலித்த படமாக ஜவான் திரைப்படம் உள்ளது.
இதையும் படிக்க: வசூலில் கலக்கும் ஆர்டிஎக்ஸ்: மக்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர்!
2,3,4வது நாள்கள் முறையே ரூ.240 கோடி, ரூ.384 கோடி, ரூ.520 கோடிகளாக இருந்தன. தற்போது 9வது நாள் வசூல் விவரத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் ரூ. 735.02 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது ஜவானின் சக்தி எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.