ஹிட்லர் - விஜய் ஆண்டனியின் புதிய படம் அறிவிப்பு!
விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற அக்.6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இதன் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சலார் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
Advertisement
Advertisement
செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.