முகப்பு
செய்திகள்

உயிர்தப்பிய நடிகர் அஜித்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

விடாமுயற்சி படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் கார் விபத்தில் சிக்கிக்கொண்ட விடியோவை வெளியிட்டுள்ளனர்.

Updated On : 4 ஏப்ரல், 2024 at 8:28 AM
பகிர்:

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. தற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், புதிய விடியோவைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், விடாமுயற்சி படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்தும் நடிகர் ஆரவ்வும் கார் துரத்தல் சண்டைக்காட்சியில் நடித்திருக்கின்றனர்.

அப்போது, நடிகர் அஜித் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கடுமையான விபத்தில் சிக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இருவரும் சிறிய காயங்களுடன் தப்பித்திருக்கின்றனர்.

இந்த விடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.