'மிஸ்டர் ஜூ கீப்பர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் புகழ்.
இதனைத் தொடர்ந்து, தற்போது திரைபடங்களிலும் நடித்து வருகிறார். இவர் கைதி, வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆகஸ்ட் 16 1947 உள்ளிட்ட படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
தற்போது, மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தில் நாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ஷிரின் காஞ்ச்வாலா, ராதிகா, விஜய் சீயோன், முத்துக்காளை உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
மாதவனின் என்னவளே படத்தை இயக்கிய ஜெ. சுரேஷ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தை எழுதி இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில், மிஸ்டர் ஜூ கீப்பர் திரைப்படம் வரும் மே 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.