முகப்பு
செய்திகள்

சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற 'ஹாய் நான்னா'!

சிறந்த திரைப்படத்திற்கான விருது ஹாய் நான்னா படத்திற்கு கிடைத்துள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2024 at 10:38 AM
பகிர்:

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடித்த 30-ஆவது படம் 'ஹாய் நான்னா'.

ஹாய் நான்னா படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். மிருணாள் தாகூர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படம் டிச.7ஆம் தேதி உலகளவில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

இந்த நிலையில், ஏதென்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது விருது ஹாய் நான்னா படத்திற்கு கிடைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.