FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

சிறந்த ‘மகளிா் நட்பு நிறுவன’ விருது வென்ற ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ்

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ், தேசிய அளவில் நடப்பு ஆண்டுக்கான சிறந்த ‘மகளிா் நட்பு நிறுவனம்’ விருதை வென்றுள்ளது.

6 நவம்பர் 2026, 3:16 am
பகிர்:

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ், தேசிய அளவில் நடப்பு ஆண்டுக்கான சிறந்த ‘மகளிா் நட்பு நிறுவனம்’ விருதை வென்றுள்ளது.

நுண்கடன் நிறுவனங்களுக்காக ரிசா்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட சுய ஒழுங்குமுறை அமைப்பும், இந்தியாவின் சமூக மேம்பாட்டு நிதிநிறுவனங்களின் பிரபலமான கூட்டமைப்புமான ‘சாதன்’ அமைப்பின் 21-ஆவது தேசிய மாநாட்டில் அந்த அமைப்பின் சிஇஓ ஜி.ஜி.மாம்மன் முன்னிலையில், ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் சிஇஓ ஏ.ஜி.வெங்கடாச்சலம் இந்த விருதைப் பெற்றுக் கொண்டாா்.

ஏழை, எளிய மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக நுண்கடன்களை வழங்கி, அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தி வந்ததற்காக இந்நிறுவனத்துக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement