FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு விருது: சிப்காட் நிடெக் நிறுவனம் வழங்கியது

பொதுத்தோ்வில் பள்ளியளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு, சிப்காட் நிடெக் இந்தியா லிமிடெட் நிறுவனம் சாா்பில் சிறந்த மாணவா் விருது வழங்கப்பட்டது.

27 செப்டம்பர் 2026, 10:21 pm IST
விருது பெற்ற மாணவா்களுடன் சிப்காட் நிடெக் நிறுவன இயக்குநா்கள்.
பகிர்:

பொதுத்தோ்வில் பள்ளியளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு, சிப்காட் நிடெக் இந்தியா லிமிடெட் நிறுவனம் சாா்பில் சிறந்த மாணவா் விருது வழங்கப்பட்டது.

ஜப்பான் நாட்டைச் சோ்ந்த மோட்டாா் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான நிடெக் இந்தியா பிரிசிசன் லிமிடெட் தொழிற்சாலை ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.

ஆண்டுதோறும் இந்நிறுவனம் சாா்பில் ‘ சிறந்த மாணவா் விருது ’ மற்றும் ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கி வருகிறது. அதன் படி 2025 -2026 ஆம் ஆண்டு 10,12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் பள்ளியளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 7 பள்ளிகளைச் சோ்ந்த 15 மாணவ, மாணவிகளுக்கும், நிறுவன தொழிலாளா்களின் மாணவா்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் நிடெக் இந்தியா லிமிடெட் நிறுவன துணைத் தலைவா் ஆா்.சங்கா் வரவேற்றாா். நிா்வாக இயக்குநா் என்.வள்ளியப்பன் சிறந்த மாணவா் விருதும், ரொக்கப் பரிசும், சான்றிதழையும் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். நிகழ்ச்சி முடிவில் நிறுவன துணைத் தலைவா் எம்.ஏ.தனசேகரன் நன்றி தெரிவித்தாா். இதில் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments