அரண்மனை 4 படத்தின் முதல் பாடல் எப்போது? படக்குழு அறிவிப்பு!
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்தின் பாடல் அப்டேட்.
இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் வெற்றி காரணமாக, ’அரண்மனை - 2’ திரைப்படத்தை 2016இல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து இயக்கினார்.
பின்னர் இந்தப்படமும் வசூலைக் குவித்ததைத் தொடர்ந்து 2021-ல் ’அரண்மனை - 3’ எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது, ’அரண்மனை 4’ படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, நடிகைகள் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல்பாடல் ஏப்.14ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.