FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தனுஷை இயக்குநராக பார்க்க பயம்: நடிகர் சரவணன்

சேலத்தில் ராயன் திரைப்படம் பார்த்த நடிகர் சரவணன் பேட்டி.

Updated On : 6 ஆகஸ்ட் 2024, 11:14 am IST
நடிகர் சரவணன் - Din
பகிர்:

நடிகர் தனுஷை இயக்குநராக பார்த்தாலே பயமாக இருக்கும் என்று நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் நடித்த நடிகர் சரவணன் தனது குடும்பத்தினருடன் சேலத்தில் உள்ள திரையரங்கில் ராயன் திரைப்படத்தை இன்று பார்த்தார்.

Advertisement

Advertisement

நடிகர் சரவணன் - Din

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரவணன்,

”தனுஷ் இயக்கத்தில் தான் நடித்த முதல் படம். அவருடன் நடிப்பதும் இதுவே முதல்முறை. இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது.

நடிகர் தனுஷிடம் நட்பாக பேசலாம், ஆனால் இயக்குநர் தனுஷிடம் அப்படி பேச முடியாது. அவரை இயக்குநராக பார்த்தாலே பயமாக உள்ளது.

இயக்குநர் தனுஷ் பேய் மாதிரி வேலை செய்வார். நடிகர் எம்.ஜி.ஆர். படத்தை இயக்கி வெற்றி பெற்றது போல நடிகர் தனுஷ் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்துள்ளார்.

எந்த நடிகராலும் தனுஷ் போல படத்தை இயக்க முடியாது. படத்தை இயக்குவதில் நடிகர் தனுஷ் கிங்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments